இடைதேர்தல் என்ற பெயரில் மற்றுமொரு கேலிக்கூத்து.
திருவரங்கத்தில் எதனால் இடைதேர்தல் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தேர்தல் நடத்துகிறேன்
பேர்வழி என்று ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் ஏன் கொச்சை படுத்துகிறீர்கள்
என்பதே என் கேள்வி. இது மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல முக்கியமாக தேர்தல்
ஆணையத்திற்க்கான கேள்வி.
ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் என்று எல்லா
ஊடகங்களும் சொல்கின்றன, இது ஊரறிந்த ரகசியமாக உள்ளது. தமிழக அரசே நிதி இல்லாமல்
திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த இடைத்தேர்தல் அவசியம் தானா?
இது என்ன கேள்வி?? ஒரு சட்டமன்ற தொகுதி காலியாக
இருக்க கூடாதே... அந்த தொகுதிக்கான பிரதிநிதி சட்டமன்றத்தில் இல்லாமல் போய்
விடுவாரே? அதெல்லாம் சரி Ground Reality என்று சொல்லக்கூடிய அசல் நிலவரம் வேறு மாதிரி இருக்கிறதே, இதற்கு இப்ப என்ன செய்யலாம்?
இடைதேர்தல் என்ற முறையையே தற்காலிகமாக ரத்து
செய்து விடலாம். அதெப்படி, இடேதேர்தல் நடந்தால் தான், மக்கள் ஒரு மாற்றத்தை
விரும்பினால் அதற்கு வாக்களிக்க முடியும்? கேள்வியெல்லாம் சரிதான்.. ஆனால் மக்கள்
தான் தங்கள் வாக்குகளை விற்கிறார்களே. அப்படி வாக்குகளை விற்கும் மக்களுக்கும்,
மக்களை அந்த நிலைமைக்கு தள்ளிய அரசியில் கட்சிகளுக்கும், இடைத்தேர்தல் ஒரு கேடா?
அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு மாற்றம் கொண்டு
வருவோம், எந்த ஒரு தொகுதி காலியாகிறதோ, அந்த தொகுதியில்
ஆளும் கட்சியே ஒரு உறுப்பினரை தேர்வு செய்து சட்டமன்றத்திற்க்கு அனுப்பி
வைக்கலாம்.
எப்படி இருந்தாலும் ஆளும் கட்சி தான் வெற்றி
பெறப்போகிறது, இதற்க்கெதற்க்கு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படவேண்டும்?
நமக்கு ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும்
பேணிக்காக்கும் பக்குவம் வந்த பின் இடைதேர்தல் முறையை மீண்டும் கொண்டு வரலாம்.
சிந்திப்பார்களா ஆட்சியாளர்கள்??
No comments:
Post a Comment