கவிஞர் வாலி அவர்கள் 18 ஜூலை 2013 அன்று காலமானார்.
81 வயதிலும் இளமை துள்ளலுடன் சமீபத்தில் அவர் எழுதிய "எதிர்நீச்சலடி" என்ற பாடல் பெரும் வெற்றி பெற்றது. இந்த பாடல் சோர்வுற்றிருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் புத்துணர்வை அளிக்க கூடிய பாடலாகும்.
திரு.வாலி அவர்கள், எம்.ஜி.ஆர், சிவாஜிக்கும் பாட்டு எழுதினார். இப்போது உள்ள இளைய தலைமுறை நடிகர்களுக்கும் பாட்டு எழுதினார்.
இணையத்தில், கவிஞர். கண்ணதாசன் இறந்த போது திரு. வாலி அவர்கள் எழுதிய கவிதையை படித்தேன்.
"எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்,
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்"
இதற்கு பிறகாவது எமன் எழுதப் படிக்க கற்றிருக்கலாம், இன்னொரு கவிதை புத்தகம் கிழிக்கப்பட்டுவிட்டது.
அவரது மறைவு தமிழுக்கும், தமிழர்களுக்கும் மிகபெரும் இழப்பு.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.